- தொலைபேசி: (+42) 348 952 11
உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் நோக்கம் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், பண்பாடுகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தல்
எமது தலைமையகம் பிரித்தானியா நாட்டில் செயற்படுகின்றது. அத்தோடு எமது கிளைகள் சர்வதேச மட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
எமது முக்கிய நோக்கமாக தமிழர்களின் இயல், இசை,நாடகக் கலைகளையும் பாரம்பரியக் கலைகளையும் பேணிப்பாதுகாத்துஅவற்றைச் செழுமைப்படுத்தல். மற்றும் தமிழ் மொழி, தமிழர்களின் கலை, பண்பாடு. தமிழர்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் பற்றிய பொருளில் சர்வதேச கருத்தரங்குகளை நடத்துதல்.
தமிழ் ஆய்வுகளை வெளியிடுதல், ஆய்வாளர்களை ஊக்குவித்தல், அரிய நூல்களை பிரசுரம் செய்தல், புதியஎழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம் செய்தல். தமிழ் எழுத்தாளர்கள், தமிழர் வரலாறு பற்றிய ஆய்வாளர்கள் மற்றும் கலைஞர்களை மரியாதை செய்து ஊக்குவித்தல் .
தமிழர்களின் இயல், இசை,நாடகக் கலைகளையும் பாரம்பரியக் கலைகளையும் பேணிப்பாதுகாத்து அவற்றைச் செழுமைப்படுத்தல்.
தமிழ் மொழி, தமிழர் கலை, பண்பாடு. தமிழர்களின் சமூக. கலாசார, பொருளாதார வாழ்வியல் பற்றிய பொருளில் சர்வதேச கருத்தரங்குகளை நடத்துதல்.
தமிழ் ஆய்வுகளை வெளியிடுதல், அரிய நூல்களை பிரசுரம் செய்தல், புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் பிரசுரம் செய்தல்.
சர்வதேசப் பேரவையானது தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் மற்றும் தமிழர்களின் வரலாறு என்பவற்றைப் பிரதிபலிக்கும் பொருட்டு சர்வதேச மட்டத்தில் கிளைகளை அமைத்தல்.
அவ்வாறு அமைக்கப்படும் கிளைகளின் நிர்வாகச் செயற்பாடுகளை அவதானித்து, தேவையேற்படும் போது தலையீடு செய்து அந்த நாட்டின் நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் வழங்குதல். அத்துடன் அமைப்பு சம்பந்தப்பட்ட சட்டச்சிக்கல் முரண்பாடுகள் ஏற்படின் அதற்குத் தீர்வு காணுதல்.
Duis aute irure dolor in repreh enderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occae cat cupidatat non proident.